புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ஏரி புனரமைப்பு பணியை தலைமை அதிகாரி ஆய்வு

சேந்தமங்கலம், ஆக.14: புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ஏரி புனரமைப்பு பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில், பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஏகே சமுத்திரம், கல்யாணி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, லக்கபுரம், தாளாம்பாடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிகள், குட்டைகள் ஆகியன தமிழ்நாடு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ₹30 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனை தலைமை ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரிகளுக்கு வரும் ஓடைவழிகள், ஏரிகரைகளை பலமாக அமைக்க வேண்டும். மழை காலங்களில் எளிதில் ஏரி, குட்டைகளுக்கு தண்ணீர்வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  ஆய்வின் போது நாமக்கல் திட்ட இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பிரபாகரன், ஒன்றிய பொறியாளர்கள் பாண்டியன், நைனாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கொல்லிமலையில் மனுநீதி முகாம்