×

கோழித்தீவன லாரி எரிந்து நாசம்

பள்ளிபாளையம், ஆக.14:  சென்டர் மீடியனில், உரசியதால் கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி எரிந்து சேதமானது. கோவையில் இருந்து சேலத்திற்கு நேற்று முன்தினம் கோழித்தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் பள்ளிபாளையம் அடுத்த செட்டியார்கடை அருகே வந்தபோது தூக்க கலக்கத்தில் டிரைவர் சாலையின் நடுவே இருந்த சென்டர்மீடியனில் மோதியபடி சென்றதால் டீசல் டேங்க் சேதமானது. அப்போது உராய்வினால் தீப்பொறி பறந்து டீசல் டேங்கில் பற்றியது. இதில் தீ மளமளவென பரவி லாரி முழுவதும் எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட லாரி டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். தீ எரிவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியாததால் இதுகுறித்து, குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், தீவனங்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் நாசமானது. விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லாரியிலிருந்து கீழே குதித்தபோது அடிபட்ட லாரி டிரைவர் ராஜா சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வருகிறார்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்