×

நாமகிரிப்பேட்டையில் ₹22 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஆக.14: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் ₹22 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.  நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வாரந்தோரும் செவ்வாய் கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்கவும், அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். மொத்தம் 560 மஞ்சள் மூட்டை விற்பனைக்கு வந்தது. விராலி மஞ்சள் 400 மூட்டையும், உருண்டை மஞ்சள் 130 மூட்டை, பானக்காலி மஞ்சள் 30 மூட்டை என மொத்தம் 560 மூட்டை ஏலத்திற்கு வந்தன.விராலிரக மஞ்சள் அதிகப்பட்சம் குவிண்டால் ₹8,022க்கும், குறைந்த பட்சம் 5,632க்கும், உருண்டைரக மஞ்சள் குவிண்டால் அதிகப்பட்சம் 7,140க்கும், குறைந்தபட்சம் குவிண்டால் ₹5,632க்கும், பானக்காலிரக மஞ்சள் அதிகப்பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு ₹13,212க்கும் குறைந்தபட்சம் குவிண்டால் ₹8,402க்கும் என மொத்தம் 560 மூட்டைகள் ₹22 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்