ராசிபுரத்தில் ₹20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ராசிபுரம், ஆக.14:  ராசிபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று ₹20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம் அடுத்த அக்கரைப்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், சிங்களாந்தபுரம், சீராப்பள்ளி, மெட்டாலா சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 990 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.  இந்த பருத்தியை வாங்க நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,666 முதல் ₹6,486 வரை ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 990 மூட்டை பருத்தி ₹20 லட்சத்துக்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பேச்சுவார்தை நடத்தியும் பிரச்னை...