பெண் கொலை வழக்கில் தடயம் சிக்காததால் போலீசார் திணறல்

தேன்கனிக்கோட்டை, ஆக. 14: தளி அருகே நேற்று முன்தினம் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தடயங்கள் சிக்காததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அரசு மருத்துவமனை சாலையில் வசிப்பவர் ராஜண்ணா(60), இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அவருடைய மனைவி லட்சுமி(40) அவருக்கு மதிய உணவு கொண்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. மாலையில் வீடு திரும்பிய ராஜண்ணா, லட்சுமி மதியமே உணவு கொடுத்து விட்டு, வீடு திரும்பி விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உறவினர்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் லட்சுமியை தேடி சென்றபோது, அன்றிரவு கீஜனகுப்பம் செல்லும் சாலையில் மயானம் அருகே ஓடையில் லட்சுமி கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். கழுத்தில் இருந்த தாலி செயின் மட்டும் காணவில்லை. இதுகுறித்து தளி இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பலகட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவித தடயங்களும் கிடைக்காததால் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED சூளகிரி அருகே யானை தாக்கி பெண் படுகாயம்