ஓசூரில் நூலக தினவிழா

ஓசூர், ஆக.14: ஓசூர் கிளை நூலகத்தில், எஸ்.ஆர்.ரங்கநாதன் 127வது பிறந்தநாள் விழா, நேற்று நூலக தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்தி, கண்காணிப்பாளர் அருட்செல்வம், நூல் இருப்பு சரிபார்ப்பு மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சேகர் வரவேற்றார். ஓசூர் கிளை நூலக வாசகர் வட்டம் தலைவர் புலவர் கருமலை தமிழாழன், தமிழ்ச்சங்க தலைவர் எல்லோரமணி, செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ராசு, பட்டிமன்ற பேச்சாளர் பவானி, பேராசிரியர் வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது திருக்குறளின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டது. புத்தகங்கள் வாசிப்பதால் ஆரோக்கியம், அறிவு, சிந்தனை, சீர்திருத்தம் அனைத்தும் கிடைப்பதாக அறிஞர்கள் பேசினர். நிகழ்ச்சியில் ரேணுகா சக்திவேல் நன்றி கூறினார்.

Tags :
× RELATED காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் தொழிலாளி திடீர் சாவு