காவேரிப்பட்டணத்தில் விசிக ஆலோசனை கூட்டம்

காவேரிப்பட்டணம், ஆக.14: காவேரிப்பட்டணத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மதிவாணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய துணை செயலாளர் சங்கர், சுந்தர், மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில் குமார், வழக்கறிஞரணி ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆகஸ்ட் 17ம் தேதி கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவது, புதிய கல்விக்கொள்கையை கொண்டு வரும் மத்திய பாஜ அரசின் போக்கை வன்மையாக கண்டித்து துண்டு பிரசுரம் விநியோகிப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர துணை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு