×

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கால் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் பாதிப்பு

தர்மபுரி, ஆக.14: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள உள்ள அணைகள் நிரம்பியது. இதையடுது–்து அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கும் கட்டடத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.   பாதாள அறைக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்மோட்டார்கள் நீரில் மூழ்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தர்மபுரி நகராட்சி மற்றும் இலக்கியம்பட்டி, உங்காரனஅள்ளி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்துக்கள்ளாகி உள்ளனர். காசு கொடுத்து கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஆழ்துளை கிணற்று தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தவிர நீண்ட தூரம் சென்று விவசாய கிணறுகளில்
இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கம் இடத்தில் உள்ள மின்மோட்டார் அறைகளில் தண்ணீர் புகுந்தது. எனவே மோட்டார் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்திற்குள் குடிநீர் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்,  தற்போது கலங்கிய நிலையில் செம்மண் நிறத்தில் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை சுத்தம் செய்யவும் சிரமம் உள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன், மோட்டார்கள் பராமரிப்பு செய்து, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பொதுமக்கள், கிடைக்கும் குடிநீரை காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா