×

அவதூறு வழக்குகளில் விஜயகாந்த் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

தர்மபுரி, ஆக.14: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணையை, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 2012ம் ஆண்டு தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக, அப்போதைய உள்ளாட்சிதுறை அமைச்சர் கே.பி.முனுசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல்நிலை காரணமாக விசாரணைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி கந்தகுமார், வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இதேபோல் 2015ம் ஆண்டு தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தேமுதிக தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாணையையும், நீதிபதி கந்தகுமார் வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த இரு வழக்குகளிலும் விஜயகாந்த் சார்பில் வழக்கறிஞர் காவேரிவர்மன் ஆஜரானார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா