காரிமங்கலம் சந்தையில் ₹48 லட்சத்திற்கு

மாடுகள் விற்பனைகாரிமங்கலம், ஆக.14:  காரிமங்கலம் வாரச்சந்தையில் நேற்று ₹48 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், 400 மாடுகளை விற்பனைக்கு ஓட்டி வந்திருந்தனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர்.சந்தையில் மாடுகள் ₹10 ஆயிரம் முதல் ₹25ஆயிரம் வரையும்,  ஆடுகள் ₹4 ஆயிரம் முதல் ₹7ஆயிரம் வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹48 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
 அதுபோல், வறட்சி காரணமாக நேற்றைய சந்தைக்கு, 1 லட்சம் தேங்காயை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் தேங்காய் ஒன்று ₹10 முதல் ₹15 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக  ₹11லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பேட்டராயசுவாமி கோயில் பூட்டை உடைத்த மர்மநபர்