அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

பாலக்கோடு, ஆக.14: பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் பாலக்கோடு தீர்த்தகிரி நகர், ரயில்வே காலனி, தக்காளி மண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாலக்கோடு- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பள்ளத்தில் மாதக்கணக்கில் தேங்கியுள்ளது. அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு  பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை வசதியை ஏற்படுத்த வேண்டும். தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி, பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மக்கள் புகார் கூறியும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அடிப்படை வசதிகளை் செய்துதர உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.

× RELATED ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கால்...