தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை

தர்மபுரி, ஆக.14:  தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(35). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதிகளவில் குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர் நாமக்கல் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்ற பாலகிருஷ்ணன், உடனே வீடு திரும்பி உள்ளார். அவரது மனைவி கேட்டதற்கு வயிற்று வலி என காரணம் கூறி யுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், மனவேதனையடைந்த பாலகிருஷ்ணண் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.  இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பேட்டராயசுவாமி கோயில் பூட்டை உடைத்த மர்மநபர்