வேட்டவலம் அருகே துணிகரம் ஓய்வு பெற்ற ஆசிரியை மீது மயக்க மருந்து தெளித்து 5 பவுன் நகை பறிப்பு

வேட்டவலம், ஆக. 14: வேட்டவலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை மீது மயக்க மருந்து தெளித்து 5 பவுன் நகையை பறித்து ெசன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேட்டவலம்- திருக்கோயிலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷம்(72), ஓய்வு பெற்ற ஆசிரியை. இந்நிலையில் கடந்த 29ம் தேதி இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவர் பிரகாசத்திடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.  தண்ணீர் கொடுத்த பிறகு ‘உங்களுடைய மகள் மேரியை எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிந்தவர் போல் பேசினாராம். அப்போது நீங்கள் அணிந்திருக்கும் செயினை போல் எனது அம்மாவுக்கும் வாங்கி கொடுக்க வேண்டும். அதனால், உங்கள் செயினை காண்பியுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால், பிரகாஷம், செயினை கழற்றி காண்பித்துள்ளார். அப்போது அவர் மீது மர்ம ஆசாமி திடீரென மயக்க மருந்தை தெளித்ததால் அவர் மயங்கி விழுந்தார். உடனே 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு அந்த ஆசாமி தப்பி சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது செயின் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பிரகாஷம் வேட்டவலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் வழக்குப்பதிந்து மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED பணிகளில் ஈடுபடும் 17,500 அரசு ஊழியர்,...