சட்டமன்ற பேரவை மனுக்கள் ஆய்வு குழு கூட்டம் 172 மனுக்களில் 47 க்கு தீர்வு காணப்பட்டது பேரவை மனுக்குழு தலைவர் தகவல்

பெரம்பலூர்,ஆக.14: பெரம் பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு கொறடா தலைமையில் நேற்று நடந்த சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு ஆய்வுக் கூட்டத்தில் பெறப்பட்ட 172 மனுக்களில் 47 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது என பேரவை மனுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து,அனைத்துத்துறை அலுவலர்களுடனான தமிழ்நாடு சட்டமன்றப் பேர வை மனுக்கள் குழுவின ரின் ஆய்வுக் கூட்டம் நேற் றுகாலை நடந்தது. கூட்ட த்திற்கு தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவரும், அரசுக் கொறடாவுமான அரியலூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் சாந்தா முன்னி லை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட் டத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்கள் குறி த்தும், அதன் செயல்பாடு கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதுபின்னர் சட்டமன்றப் பேரவை மனுக்கள்குழுத் தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகை யில், சட்டசபை மனுக்கள் குழுவினர், பொதுமக்க ளின் பிரச்னைகளை களைந்திடத் தீர்வு காணும் பொருட்டு துறை அலுவலர் களுடன் சேர்ந்து ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு முதல் நடப்பாண்டுவரை பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வும் மறு ஆய்வும் செய் தனர்.இவற்றில் பல மனுக் களின் மீதான கோரிக்கை கள் நிறைவேற்றப்பட்டும், இதர மனுக்கள் மீது நடவடி க்கை மேற்கொள்ளவும், விரைந்து செயல்படுத்திட வும், துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து துறை அலுவ லர்களும் விரைந்து செயல் படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக குழுவின் முன் தெரிவித்துள்ளனர். இக்குழு தொடர்பான அறிக்கையினை சட்டசபை கூட்ட த்தின்போது குழு ஒப்புதல் பெற்று சட்டசபையில் அளி க்கும். மொத்தம் 172 கோரி க்கை மனுக்கள் பெறப்பட் டது. இதில் 47 மனுக்களுக் குத் தீர்வு காணப்பட்டுள் ளது. 32 மனுக்கள் நிலுவை யில் உள்ளது. 93 மனுக்கள் படித்து பதிவு செய்யப்பட்டு ள்ளது என்றார்.இதனைத் தொடர்ந்து பெர ம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை யில் ரூ20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தின் சார்பில் கவுள்பாளை யத்தில் ரூ41.03 கோடி மதிப் பீட்டில் 504குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் கட்டிடங்க ளின் கட்டுமான பணிகளை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மாத் தூர் முதல் திட்டக்குடி வரை யில் ரூ.29.50 கோடி மதிப்பீ ட்டில் அமைக்கப்பட்ட 26கி.மீ நீளமுள்ள சாலை மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடி மதிப்பீட்டில் கல்பாடி முதல் நெடுவாசல் வரை 2.56 கி.மீ நீளம் போடப்பட்டு ள்ள சாலை ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக் கள் பயன்பாடு குறித்து பொது மக்களிடம் கேட்ட றிந்தனர்.மனுக்கள் குழுவின் ஆய்வு கூட்டம் மற்றும் மறுஆய் வின் போது குழுவின் உறுப்பினர்கள் ஆறுமுகம், சக்ர பாணி, விஜயகுமார், அன்ப ழகன், துரைசந்திரசேகரன், தனியரசு,முருகன் மற்றும் குழு செயலாளர் சீனிவா சன் மற்றும் கலெக்டர் சாந்தா, எஸ்பி திஷாமித்தல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...