அரியலூர் மாவட்டத்தில் நாளை 201 கிராமங்களில் கிராமசபை கூட்டம் பொதுமக்களுக்கு அழைப்பு

அரியலூர், ஆக. 14: சுதந்திர தினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல். 2019-2020ம் நிதியாண்டு வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுதல். குடிநீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படும். மேலும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளின்முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தெரிவித்து ஒப்புதல் பெறுதல் குறித்து விவாதிக்கப்படும்.

இதைதொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை தடை செய்தல், உணவுப்பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்த தீர்மானித்தல், ஜல்சக்தி இயக்கத்தை மாபெரும் இயக்கமாக செயல்படுத்த தீர்மானிக்கப்படுகிறது. மேலும் முழு சுகாதாரம், முன்னோடி தமிழகம் திட்ட செயல்பாடு, கழிப்பறை இல்லாதோர் விவர பட்டியல் எடுத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், மகளிர் திட்டம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து தேசிய வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வட்டி மானிய திட்டம், பிரதம மந்திரி சுரக்ஷாபீமா யோஜ்னா காப்பீடு திட்டம் மற்றும் அட்டல் பென்சன் யோஜ்னா குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களால் கொண்டு வரப்படும் இதர பொருள்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...