கொள்ளிடத்தில் இருந்து மணல் கடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு மாட்டு வண்டிகள் பறிமுதல்

தா.பழூர், ஆக. 14: கீழகுடிகாடு கொள்ளிட கரையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகுடிகாடு கொள்ளிட கரையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 10 டயர் மாட்டு வண்டிகளை பிடித்து சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (52), ராஜேந்திரன் (60), ஆனந்தகுமார் (32), முருகன் (35), ராஜா (39), அமிர்தராயன்கோட்டை ராதாகிருஷ்ணன் (51). வாணதிராயன்பட்டினம் கண்ணதாசன் (23), அங்கராயநல்லூர் இளங்கோவன் (55), கலியபெருமாள் (70), உத்திரக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (54) ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன...