தரமாக பணி மேற்கொள்ளுமாறு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வந்த லாரி முற்றுகை பொதுமக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம், ஆக. 14: தரமாக பணி மேற்கொள்ளுமாறு ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் பாரத பிரதமர் திட்டத்தின்கீழ் போடப்பட்ட சாலையை சீரமைக்க வந்த லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை பாரத பிரதமர் திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டுக்கு முன் இந்த சாலையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடந்த 6 மாதத்துக்குள் குண்டும் குழியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இந்த சாலையில் மராமத்து பணி நடந்தது. குண்டும் குழியுமான சாலையில் சிமென்ட் கலந்த கலவையை நிரப்பி வந்தனர். அப்போது கிராம பொதுமக்கள் வந்து இந்த சாலை பகுதியில் உள்ள குண்டும், குழிகளில் தார் மூலம் தான் சாலையை மாரமத்து பணி மேற்கொள்ள வேண்டுமென லாரியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததம் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரியப்படுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்