சுக்காலியூர் சாலைப்புதூரில் குடிமகன்களின் புகலிடமாக மாறிய குடிநீர் தொட்டி மோட்டார் அறை

கரூர், ஆக. 14: நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் சுக்காலியூர் அருகே உள்ள சாலைப்புதூரில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் அறை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மதுபான கூடமாக மாறி வருகிறது. மதுபானம் அருந்த சிலர் இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுப்பதற்கு உள்ளாட்சி அதிகாரிகள் தொட்டியை பராமரிப்பு செய்ய வேண்டும். கதவு அமைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அரச மர வேர்களுக்கு நடுவில் விநாயகர்...