மூக்கணாங்குறிச்சி பெரியார் காலனியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், ஆக. 14: லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் பெரியார் காலனி உள்ளது. பெரியார் காலனி குடிநீர் திட்டத்திற்காக லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. ஆழ்குழாய் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2012-13ம் நிதியாண்டில் இந்த தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து மோட்டார் மூலமாக நீரேற்றம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக தொட்டியில் நீர் சரியாக நிரம்புவதில்லை. இதனால் பெரியார் காலனி மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வேறு பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.மோட்டார் பலமணி நேரம் போட்டாலும் கூட தொட்டி நிரம்புவதில்லை. இந்த தொட்டியில் இருந்து சின்டெக்ஸ் தொட்டிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் இப்பகுதிக்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை.தற்போது குடிநீர் விநியோகம் செய்யாத இடங்களுக்கு லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டு விநியோகம் செய்ய உள்ளாட்சி துறை ஏற்பாடு செய்துள்ளது.தங்கள் பகுதிக்கும் இந்த முறையைப் பின்பற்றி லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலை தொட்டியில் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பிப். 28ல் துவக்கம் புன்னம் அரசு...