கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் சாலை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், ஆக. 14: சாலை செப்பனிடாததால் வாகன ஓட்டிகள்அவதிப்படுகின்றனர்.கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இங்குள்ள தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. வடக்கு பிரதட்சணம் சாலையில் இருந்து ராமகிருஷ்ணபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் வேலைக்கு வந்து செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்,, சாலை பழுதுகாரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு