கரூர் செட்டிபாளையத்தில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

கரூர், ஆக. 14: கரூர் செட்டிபாளையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பம் உள்ளது. அதன் பின்னர் சரியான முறையில் பராமரிக்காததால் தற்போது மின்கம்பம் உடைந்து சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

கான்கிரீட் பெயர்ந்து போய் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. பலத்த காற்று வீசும்போது கம்பம் ஆடுகிறது. இதே நிலைதொடர்ந்தால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழ கூடிய அபாய நிலை உள்ளது.அவ்வாறு ஏற்பட்டால் உயிர்ப்பலி உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் எப்போது கம்பம் முறிந்து விழுமோ என்று அச்சம் மற்றும் பீதியில் உள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை பார்வையிட்டு மாற்றி அமைக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags :
× RELATED பிப். 28ல் துவக்கம் புன்னம் அரசு...