ஜவகர் கடைவீதியில் கார் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல்

கரூர், ஆக. 14: கரூர் கடைவீதியில் கார்பார்க்கிங் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது.கரூர் ஜவகர்கடைவீதியில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. காலை மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி. கரூர் காமராஜர் சிலை பக்கவாட்டு பகுதிகள் மற்றும் ஆங்காங்கே கடைவீதி பகுதியில் இருபுறமும் சாலையில் வாகனங்களை குறிப்பாக கார்களை வரிசையாக பார்க்கிங் செய்து வைத்துள்ளனர். வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதியில்லை.அதனால் வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் கார்களை நிறுத்தி வைக்கின்றனர். இது போக்குவரத்திற்கு இடையூறாக அமைகிறது. கார் பார்க்கிங் செய்வதை தவிர்த்தால் போக்குவரத்துக்கு ஏதுவாக இருக்கும். எனவே கார்கள் நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு