×

கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க அழைப்பு

திருப்பூர், ஆக.14:  திருப்பூர் மாவட்டத்தில் நாளை(15ம் தேதி) நடக்கும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தேவைகள் குறித்து விவாதிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக அரசு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆக.15ம் தேதி கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் பொது இடங்களில் நடக்கிறது. கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், உணவுப் பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லா ஊராட்சிகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், மழைநீர் சேகரிப்பு உட்பட 25 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, கிராம சபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்தந்த கிராம பொது மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...