சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

காங்கயம், ஆக.14:  தமிழ்நாடு சத்துணவு  ஊழியர் சங்கதின் திருப்பூர் மாவட்ட 4வது பேரவை கூட்டம் காங்கயத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜராஜேஸ்வரி வரவேற்று பேசினார்.

 சங்கத்தின் மாநில பொருளாளர் பேயத்தேவன், தலைவர் சுந்தராம்பாள், செயலாளர் சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மகளிருக்கு என்று தனியாக மகளிர் பேருந்து இயக்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெரும் சத்துணவு ஊழியர் அனைவருக்கும் ஓட்டுமொத்த தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், 13 வகையான உணவு தயாரிப்பு செலவின மானியத்தொகை, ஒரு மாணவனுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் சமையல் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மாவட்ட இணை செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories: