பின்னலாடைகளில் புதுமை தொழில் துறையினர் அசத்தல்

திருப்பூர், ஆக. 14: போட்டி நாடுகளுக்கு இணையாக பின்னலாடைகளில் திருப்பூர் தொழில் துறையினர் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 1000 மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் வெளிமாநிலங்கள் வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவைப் போன்று இந்தோனேசியா, சீனா வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளை சமாளித்து கொண்டு தொழில் துறையினர் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே போட்டி நாடுகளுக்கு இணையாக பின்னலாடைகளில் புதுமைகளை திருப்பூர் தொழில் துறையினர் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:  ஆடை தயாரிப்பில் இந்தியாவை போன்று ஏராளமான நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் ஆடை தயாரிப்புக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன. இதன் காரணமாக போட்டி நாடுகள் குறைந்த விலையில் அதிக அளவில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்தந்த உள் நாடுகளிலும் ஆடை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த நாடுகளில் ஆடை விற்பனை அதிகமாக இருப்பதற்கு அங்குள்ள ஆடை வடிவமைப்பும் ஒரு காரணம். திருப்பூரிலும் திறமையான ஆடை வடிவமைப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.

இருப்பினும் போட்டி நாடுகளில் ஆடைகள் ஏதாவது ஒரு புதுமைகளை புகுத்தி விடுகிறார்கள்.  இந்நிலையில் திருப்பூரிலும் போட்டி நாடுகளுக்கு இணையாக  தொழில்துறையில் புதுமை போது தொடங்கியுள்ளனர்.ஆடைகளின் காலரில் புதிய வடிவமைப்புகள் பட்டன்களில் புதிய வடிவமைப்புகள்  என  ஏராளமான தொழில்நுட்பங்களை முன்பு இருந்ததை விட அதிகமாக செயல்படும் தொடங்கியுள்ளோம். இதன் காரணமாக மகிழ்ச்சியில் உள்ளோம் விரைவில் போட்டி நாடுகளை வீழ்த்துவோம் போட்டி நாடுகளில் உள்ள வார்த்தைகளையும் கைப்பற்றி உள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: