தெற்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டி

திருப்பூர், ஆக.14:  திருப்பூர் தெற்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டி, கிட்ஸ் கிளப் பள்ளியில் நடந்தது. கிட்ஸ் கிளப் பள்ளி குழும சேர்மன் மோகன்கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் சண்முகநதி, முத்தையா நவீன், கார்த்திகேயன் ஆகியோர் போட்டி நடுவர்களாக பணியாற்றினர். பதினான்கு வயது மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் முகமது ஹபீஸ் (செஞ்சுரி பவுண்டேசன்). இதே பள்ளியை சேர்ந்த சித்தார்த் 19 வயது பிரிவில் முதலிடம். 17 வயது பிரிவில் முதலிடம் சஞ்சய் (வித்யவிகாசினி). இரட்டையர் பிரிவு, 14 வயதுக்கு உட்பட்டோரில் செஞ்சரி பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப் இரண்டாமிடம். 17 வயது பிரிவிலும், 19 வயது பிரிவிலும் செஞ்சுரி பவுண்டேசன் முதலிடம். பிரன்ட்லைன், வித்யவிகாசினி முறையே இரண்டாமிடம். பதினான்கு வயது மாணவிகள் தனிநபர் பிரிவில் முதலிடம் திவ்யதர்ஷினி 17 வயது பிரிவில் நேசிகா (கைரளி வித்யாலயா), 19 வயது பிரிவில் தேவநந்திதாக (பிரன்ட்லைன்). இரட்டையர் 14 வயது பிரிவில் கிட்ஸ்கிளப் முதலிடம், கிட்ஸ்கிளப் மிடில் ஸ்கூல் இரண்டாமிடம். 17 வயது பிரிவில் செஞ்சுரி முதலிடம், 19 வயது பிரிவில் பிரன்ட்லைன் முதலிடம். இரு பிரிவிலும் கிட்ஸ் கிளப் இரண்டாமிடம் பெற்றன.

Related Stories: