தூய்மை விழிப்புணர்வு மாணவிகள் பேரணி

திருப்பூர், ஆக. 14: திருப்பூர், ரயில்நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி குமரன் கல்லூரி மாணவிகள் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.திருப்பூர், குமரன் மகளிர் கலைக்கல்லூரி என்எஸ்எஸ்., மாணவிகள் நேற்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வழியுறுத்தி ரயில்நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில், குமரன் கல்லூரியின் என்எஸ்எஸ்., அலுவலர்கள் பாக்யலட்சுமி, பிருந்த உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரயில்நிலைய மேலாளர் பெரியசாமி, துணை மேலாளர் முத்துகுமார் முன்னிலையில் மாணவிகள் ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்போம், கழிப்பறையை பயன்படுத்துவோம், நடைபாதையில் குப்பைகளை போடமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, ரயில்நிலைய வளாகத்தில் தூய்மையை கடைபிடிக்க வலிறுத்தி பேரணியாக ெசன்றனர். இதைமுன்னிட்டு பயணிகளிடம், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ரதிசுதா செய்திருந்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: