கள் மீதான தடையை நீக்க வேண்டும்’

அவிநாசி,ஆக. 14:  தமிழ்நாடு கள்இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளதாவது,‘‘ கர்நாடக மாநிலத்தில் இட்லி, தோசை மாவைப் புளிக்க வைக்க பனை, தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் கள்ளைப் பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இவை கள்இட்லி, கள்தோசை என்றே அழைக்கப்படுகிறது. இயற்கையான கள் கலந்த உணவு சுவை, மணம் கொண்டதாகவும், உடல்நலத்துக்கு ஏற்றதாகவும் இருக்கும்.  குறிப்பாக ஆண்டிபயாடிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்தும், பல்வேறு பிரச்னைகளில் இருந்தும் விடுபட கூடுதலாக மோர் குடிக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கள்ளும், மோரும் ஏறத்தாழ ஒன்றேயாகும். மோரில் இருப்பதைப் போல, கள்ளிலும் ஆல்கஹால் உள்ளது. உலகளவில் தமிழகத்தில் மட்டும்தான் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது. கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. எனவே, ‘கள்’ மீதான தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: