நிவாரணம் குறித்து எதுவும் பேசாமல் சென்ற துணை முதல்வர்

பந்தலூர்,ஆக. 14: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக துணை முதல்வர் பார்வையிட்டு மக்களை சந்தித்தார். இதில் நிவாரணம் குறித்து எதுவும் கூறாமல் சென்றதால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.  நீலகிரி மாவட்டம் பந்தலூர்,கூடலூர் பகுதியில் கனமழைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் பந்தலூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைத்துள்ளனர். கடந்த 2 நாளாக மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் பந்தலூர் உள்ளிட்ட ஒரு சில முகாம்களில் தங்கியிருந்த மக்கள் நேற்று முதல் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வரும் நிலையில், நேற்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பந்தலூர் பகுதிக்கு வந்து படச்சேரி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்வையிட்டு அதன்பின் சேரங்கோடு அரசு பள்ளிக்கு சென்று முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.

   இதனை தொடர்ந்து சேரம்பாடி தனியார் மண்டபத்தில் மழையால் பாதித்து  தங்கியிருந்த மக்களுக்கு நிவாரணம் பொருட்களை தமிழக துணை முதல்வர் வழங்கினார். இந்த ஆய்வின் ேபாது செய்தியாளர்கள் சேதம் குறித்து துணை முதல்வரிடம் கேட்டபோது,
எதுவும் கூறாமல் சென்று விட்டார்.  இந்நிலையில் வீடு, உடமைகளை இழந்து முகாமில் தங்கியுள்ள மக்களிடம் நிவாரண தொகை குறித்து எதுவும் பேசாமல் துணை முதல்வர் சென்றதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். துணை முதல்வர் வருகையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்ய துவங்கினர்.   இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தேனி எம்.பி. ரவிந்திரநாத்குமார், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக., நகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Tags :
× RELATED மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அலுவலர் நியமனம்