சோமனூர் ரயில்வே மேம்பாலத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

சோமனூர், ஆக.14:  சோமனூர் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது, இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சோமனூரில் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் அமர்ந்து அப்பகுதி மக்கள் அதிகளவு மது அருந்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நடந்து செல்பவர்கள் அச்சம் அடைகின்றனர். பாலம் கட்டப்பட்டதில் இருந்து நடைபாதைக்கு தனியாக வழி எதுவும் இல்லை. பொதுமக்கள் வழக்கம்போல ரயில்வே தண்டவாளத்தை கடந்து வருகின்றனர். அந்த தண்டவாளத்தின் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் எப்போதுமே அதிக அளவில் ஆண்கள் குடித்துவிட்டு அரை நிர்வாணத்துடன் காட்சியளிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் செல்லக்கூடிய பள்ளி மாணவிகள், பொதுமக்கள் பெண்கள் வேதனை அடைகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், திருட்டு விசிடி மற்றும் கள்ளச்சந்தையில் பாவு நூல் ஏற்றுவது உள்ளிட்ட செயல்கள் தங்கு நடப்பதாகவும், வேன்கள், வாகனங்களை அங்கு கொண்டுவந்து நிறுத்தி விட்டு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: