ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி வரும் 17,18ம் தேதி நடக்கிறது

கோவை, ஆக.14: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வி.ஜி விளம்பர நிறுவனம் சார்பில்  வீடு மற்றும் வீட்டு கடன் கண்காட்சி வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. கோவை, அவினாசி ரோட்டில் சுகுணா மண்டபத்தில் நடக்கவுள்ள கண்காட்சியை எஸ்.பி.ஐ வங்கியின் துணை பொதுமேலாளர் சத்திய பிரகாஷ் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக பிரிக்கால் நிறுவன தலைவர் வனிதா மோகன், நடிகை தேவயானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தில் 0.1% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும் வேறு வங்கியில் இருந்து எஸ்.பி.ஐ வங்கிக்கு வீட்டுகடனை மாற்றுபவர்களுக்கு 0.25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசீலனை கட்டணம் இல்லை. இதில் ரூ.15 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை பங்களாக்கள், வீடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் உணவு திருவிழாவும், பெண்கள், குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. பொதுமக்கள் மற்றும் கடன் தேவைப்படுவோர் அனைவரும் இக்கண்காட்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய எஸ்.பி.ஐ வங்கியின் கோவை பிராந்திய மேலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: