விஸ்வகர்ம மக்களுக்கு தொழில் செய்ய அரசு சலுகை வேண்டும்

கோவை, ஆக. 14:  ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு  மணிமண்டபம் மற்றும் முழு உருவ சிலை நிறுவ அரசாணை பிறப்பித்துள்ளதற்கு விஸ்வ பிரம்ம ஜகத்குரு பாபுஜி சுவாமி தலைமையில் சென்ற நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது,கோவையில் செப்டம்பர் 17ம் தேதி நடக்கும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்க  முதல்வருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் விஸ்வ பிரம்ம பாபுஜி சுவாமிகள் கோரிக்கைகளை தெரிவித்தார். இதில், விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். விஸ்வகர்மா மக்களின் தொழிலாளர்களின் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தார்.கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதில், விஸ்வகர்மா மத்திய மகாஜன சங்கம், எம்.கே.டி பேரவை, விஸ்வகர்மா பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு விஸ்வ கர்மா மக்கள் பேரவை, விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் முன்னணி ,தென்னிந்திய விஸ்வகர்மா சங்கம், கைவினைஞர்கள் முன்னேற்ற சங்கம், தென்னிந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம், விஸ்வ ஜன சக்தி கட்சி ,ஹரி ஓம் இந்து சங்கம் மற்றும் பல சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: