×

உலக யானைகள் தின கருத்தரங்கம்

சத்தியமங்கலம், ஆக.14:உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜங்கிள் தொண்டு நிறுவனம் சார்பில் சத்தியமங்கலம் காமதேனு கல்லூரியில் யானைகளின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநரும், தலைமை வனப்பாதுகாவலருமான நாகநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். யானைகள் எவ்வாறு தனது தீவனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. தீவனம் தேடி பயணிக்கும் தூரம், யானைகளின் விதைப்பரவல் காரணமாக வளமாகும் வனங்கள், பல்லுயிர் பெருக்கத்திற்கு யானைகள் ஆற்றும் முக்கிய பங்கு, ஆண் யானை மற்றும் பெண் யானையின் குணாதிசயங்கள் குறித்து தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன்  கல்லூரி மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.இதைத்தொடர்ந்து யானைகள் தினம் குறித்து பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...