ஆற்று குடிநீர் வழங்க கோரி சமத்துவபுரம் கிராம மக்கள் மனு

சத்தியமங்கலம், ஆக.14: ஆற்று குடிநீர் வழங்க கோரி சமத்துவபுரம் கிராம மக்கள் மனு நேற்று கொடுத்தனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவடவள்ளி  சமத்துவபுர கிராம மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த குடிநீர் இக்கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான செண்டுமல்லி பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலையின் கழிவுநீர் ஆழ்குழாய் கிணற்று நீரில் கலந்துள்ளதால்  குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

Advertising
Advertising

ஆகவே, ஆற்று நீர் விநியோகிக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  100க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட வந்தனர். தகவலறிந்த பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் மற்றும் போலீசார்,  வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related Stories: