நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் நூலகர் தின விழா

ஈரோடு, ஆக.14:ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் மத்திய நூலகத்துறை, ஈரோடு மாவட்ட மைய நூலகம் இணைந்து நூலக அறிவியலின் தந்தையுமான எஸ்.ஆர்.ரங்கநாதன்  பிறந்த நாளை முன்னிட்டு நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியில் நடந்த விழாவிற்கு  நந்தா அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் எஸ்.ஆர். ரங்கநாதனின் உருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். கல்லூரியின் மத்திய நூலகத்துறை தலைவர் பிரகாஷ் வரவேற்றார். பின் சிறப்பு விருந்தினர் ஆருரன் பனுவல், இங்கிலாந்து வாழ் நூலகர் பிரதீபா, மகேஸ்வரி மதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் மாணவர்களுக்கு பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில்  நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: