சுதந்திர தினவிழாவில் 116 பேருக்கு பதக்கம்

ஈரோடு, ஆக.14:  சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஆசிரியர்கள் 116 பேருக்கு சுதந்திர தினவிழாவில் பதக்கம் வழங்கப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவின் போது பல்வேறு அரசு துறையை சேர்ந்த ஊழியர்கள், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி, பதக்கம் அளிப்பது வழக்கம். இதேபோல் நடப்பாண்டு சுதந்திர தின விழா நாளை (15ம் தேதி) ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 16 பேர், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 100 போலீசாரும் கலெக்டரிடம் பதக்கம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் அந்தந்த துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பதக்கம் பெற தேர்வு பெற்றவர்களுக்கு நாளை வ.உ.சி. பூங்காவில் நடக்கும் விழாவில் பதக்கம் வழங்கப்படும்.

Advertising
Advertising

Related Stories: