சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம், ஆக.14: சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட ராமபைலூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடுவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர்.அப்போது, புளியமரக்கொடிக்கால் என்ற இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை பிடித்தனர்.

Advertising
Advertising

விசாரணையில், அவர்கள் ராமபைலூர் தொட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் (55), சவுந்தரராஜன் (35) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சி மற்றும் அரிவாள், கம்பி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இருவரையும் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து இருவரிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி மண்ணெண்ணெய் ஊற்றி

Related Stories: