ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

விழுப்புரம், ஆக. 14: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில்நிலையம் அருகே சுமார் 55 வயதுமதிக்கத்தக்க ஒரு முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த விழுப்புரம் ரயில்வே இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்திருந்த அவர் பெயர், முகவரி ஏதும் தெரியவில்லை. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விஏஓக்களுக்கு செலவின தொகை வழங்க வேண்டும்