கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி, ஆக. 14: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி இடையர் சந்து தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்(40). தனது குழந்தைகளுக்கு கடந்த மூன்று நாள் தொடர் பள்ளி விடுமுறை என்பதால் தற்போது குடியிருக்கும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கள்ளக்குறிச்சி அடுத்த தோப்பூர் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு நேற்று காலை வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது பூட்டிய வீடு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவும் திறந்த நிலையில் துணிகள் கலைந்து கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ஐந்தரை பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவை  கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டுமான பணி விறுவிறு