விழுப்புரம் மாவட்டத்தில் 6 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு

விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் மாவட்டத்தில் 6 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் காவல்துறையில் பணியாற்றிவரும் 160 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐக்களாக பணியாற்றி
வந்த விஜி, தமிழ்ச்செல்வி, கவிதா, ஜெய்சங்கர், சுமதி, ராதிகா, கீதா ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து வடக்குமண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் ஏற்கனவே மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் மூன்று பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி விழுப்புரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ணவல்லி திருப்பூர் மாநகரத்திற்கும், ரோஷணை ஆண்டவர் மேற்கு மண்டலத்திற்கும், கோட்டக்குப்பம் மதுவிலக்குஅமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கணபதி ரயில்வேக்கும் இடமாற்றம் செய்து காவல்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED திமுக தேர்தல் படிவம் வழங்கல்