விக்கிரவாண்டி அருகே அரசு மருத்துவமனையில் மயங்கி விழுந்து முதியவர் பலி

விக்கிரவாண்டி, ஆக. 14: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று  சுமார் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர்  உடல் நலக்குறைவு காரணமாக மாத்திரை வாங்க வந்து வரிசையில் நின்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு டாக்டரிடம் தூக்கி சென்றனர்.   பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் இறந்தவர் யார் என்று தெரியாததால்  அங்கிருந்தவர்கள் விக்கிரவாண்டி  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்தவரின் பாக்கெட்டில் ஏடிஎம் ரசீது இருந்தது. அதை வைத்து அங்கிருந்த வங்கியில் சென்று விசாரித்த போது இறந்தவர் விசுவரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சாமிக்கண்ணு (70)  என தெரியவந்தது. இதையடுத்து உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து இறந்தவரின் உடலை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: