திண்டிவனத்தில் இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

திண்டிவனம், ஆக.  14:   திண்டிவனத்தில் இளம்பெண் மாயமானதாக அவரது அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். வந்தவாசி தாலுகா மாவலவாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது தங்கை புவனேஸ்வரி (20)  இவர் கடந்த சில தினங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மேல்மலையனூர் கோயிலுக்கு செல்வதற்காக வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன், திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறுவதற்கு நின்றிருந்தனர். அப்போது திருவண்ணாமலை செல்லும் பேருந்து ஒன்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்து ஒன்றும் வந்துள்ளது. அந்த நேரத்தில் புவனேஸ்வரி அவரது குடும்பத்தினர் ஏறும் பேருந்தில் செல்லாமல் காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறியதாக தெரிகிறது. பின்னர் அவரது அண்ணன்புவனேஸ்வரியை பேருந்தில் தேடி பார்த்தார்.

பேருந்தில் இல்லாததால் உறவினர்களுடன் பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் செஞ்சி பேருந்து நிறுத்தம் வந்து தேடி பார்த்தனர். மேலும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வெங்கடேசன், திண்டிவனம்  காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED விஏஓக்களுக்கு செலவின தொகை வழங்க வேண்டும்