மணல் கடத்திய 2 பேர் கைது

திருக்கோவிலூர், ஆக. 14: திருக்கோவிலூர் அடுத்த கீழக்கொண்டூர் பகுதியில் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த தணிகாசலம் மகன் திரிசங்கு (40), முருகன் மகன் புஷ்பவேல் (25) ஆகியோர் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: