மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலூர், ஆக. 14: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பிள்ளையார்குப்பம் தனபால் மகன் சண்முகம் (48), அமாவாசை மகன் ராஜா (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: