வருவாய்த்துறை முகாமில் 42 பேர் மனு

திண்டிவனம், ஆக. 14: திண்டிவனம் அடுத்த எறையானூரில் மக்களை தேடி வருவாய்த்துறை முகாம் நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் வேலு தலைமையில் நடைபெற்ற முகாமில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்களிடம்

மனுக்களை பெற்றார்.
Advertising
Advertising

இதில் முதியோர் உதவித்தொகை மனுக்கள் 21, பட்டா மாற்றம் மனுக்கள் 12, இலவச வீட்டுமனை பட்டா 9 உள்ளிட்ட 42 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களில் 17 மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 மனுக்கள் தள்ளுபடியும், 12 மனுக்கள் நிலுவையில் உள்ளது. நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் சித்தார்த்தன், ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: