திண்டிவனம் அருகே ஏரியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

திண்டிவனம், ஆக. 14: விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது முருக்கேரி ஏரி. இது அப்பகுதியில் விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி  வருகிறது.  இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் அவ்வழியாக  வயலுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கும் அப்பகுதியில் ஒட்டி செல்ல முடியாத நிலை உள்ளது. விரைவில் மழை  காலம் தொடங்க உள்ளதால், கோழி கழிவுகள் அனைத்தும் ஏரி தண்ணீரில் கலக்கும் அபாயம் உள்ளது.

இதனால் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். ேமலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.ஆகையால்  ஏரியில் கொட்டப்படும் கழிவுகளை  அகற்றி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீண்டும் ஏரியில் யாரும் கோழி  கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: