காஞ்சி கலெக்டருக்கு எதிராக ஓய்வுபெற்ற போலீசார் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,  ஆக. 14: காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த  இன்ஸ்பெக்டரை திட்டி, அவமானப்படுத்திய ஆட்சியர் பொன்னையா மீது தமிழக அரசு  உடனடியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை  எடுக்கக்கோரி விழுப்புரம், கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்  நலச்சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். ஆனால் மாவட்ட காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த  கோரிக்கையை வலியுறுத்தி தனியார் திருமணமண்டபத்தில் கண்டனகூட்டம்  நடத்தினர். அப்போது ஆட்சியருக்கு எதிராக ஓய்வுபெற்ற போலீசார் எழுந்துநின்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.  முன்னாள் டிஎஸ்பிக்கள் மணி, கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட  செயலாளர் கலிவரதன் வரவேற்றார். முன்னாள் டிஎஸ்பி விஜயகுமார்  சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் நாகராஜன், இளையபெருமாள்,  கிருஷ்ணமூர்த்தி, பன்னீர்செல்வம், அன்சர் செரீப் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: