பைக் விபத்தில் விவசாயி பலி

விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணாங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மகன் ரகுபதி (45), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினத்தில் இருந்து விதை நெல் வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கருவேப்பிலங்குறிச்சி மெயின் ரோட்டில், பெலாந்துறை பெரிய வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் ஒன்று ரகுபதியின் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரகுபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து ரகுபதியின் மனைவி கங்காதேவி கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா