பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

சிதம்பரம், ஆக. 14: சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா. மாற்று திறனாளியான இவர் மாற்றுத்திறனாளிகளின் புது முன்னேற்ற நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் வீட்டின் அருகே சிறு வாய்க்கால் உள்ளதால் வாய்காலை கடந்துதான் இவர் சாலைக்கு வரவேண்டிய நிலை இருந்ததால், வாய்க்காலில் ரூ.30 ஆயிரம் செலவில் சிமெண்டால் ஆன சிறிய பாலம் அமைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இதையறிந்த பொதுப்பணித்துறையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி பாலத்தை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நேற்று மாலை சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சுமார் 15 மாற்றுத்திறனாளிகள் வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இல்லாததால், அவர்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் அகற்றப்பட்ட பாலத்திற்கு மாற்று வழி ஏற்படுத்தி தருமாறு மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து