சாலை அமைக்கும் பணி ஆய்வு

பண்ருட்டி, ஆக. 14:  பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர், ஆனந்தா நகர் ஆகிய பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டி கோரிக்கை மனு வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அமையாத இந்த சாலைக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மதிப்பீடு அறிக்கை தயார் செய்து பணி துவங்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் பேரில் பணிகள் நடந்து வந்தன. சிமெண்ட் சாலை பணிகளை சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ  ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, பொறியாளர் மகாராஜன், பணி ஆய்வாளர் சாம்பசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED 2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன செல்போன்